பொலிவான சருமத்துடன் இளமையாக இருக்க இத ட்ரை பண்ணுங்க…

ஆணோ பெண்ணோ 30 வயது ஆனதும் தங்களது அழகை பராமரிக்க தவறி விடுகிறார்கள். இதன் விளைவு நரைத்த முடி, சுருக்கங்கள், சரும தொய்வு போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது. இது உங்களுக்கு வயதாகுவதை வெளிப்படுத்தி விடுகிறது. வாங்க வயதாகுவதை தடுத்து இளமையை திருப்பித் தரும் வீட்டு முறைகளை பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தேன்:
தேனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும் 20 நிமிடங்கள் அப்படியே வைத்த பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற விதத்தில் செய்தால் நல்ல பலனை காணலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ்:
தேவையான பொருட்கள்: 1 சிறிய உருளைக்கிழங்கு 1 காட்டன் பஞ்சு
செய்முறை:
உருளைக்கிழங்கை அரைத்து ஒரு மஸ்லின் துணியில் எடுத்து கொள்ளவும். எல்லா சாறையும் ஒரு சிறிய பெளலில் பிழிந்து கொள்ளவும் இப்பொழுது காட்டன் பஞ்சை அதில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளே செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

வாழைப்பழம்:
தேவையான பொருட்கள்: 1 பழுத்த வாழைப்பழம், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்
செய்முறை:
ஒரு மீடியமான பெளலில் வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ரோஸ் வாட்டர், தேன் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். பிறகு யோகார்ட்டை கலந்து கொள்ளவும் பிரஷ்யை கொண்டு இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி விடவும் 20 நிமிடங்கள் காய வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

தேங்காய் பால்:
தேவையான பொருட்கள்: 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 1 காட்டன் பஞ்சு செய்முறை:
இப்பொழுது இந்த காட்டன் பஞ்சை தேங்காய் பாலில் நனைத்து முகத்தில் நன்றாக தடவிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

பப்பாளி:
பப்பாளி நன்றாக மசித்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

யோகார்ட்:
தேவையான பொருட்கள்: 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ். 1 விட்டமின் ஈ மாத்திரைகள், கொஞ்சம் மஞ்சள் தூள்
செய்முறை:
லெமன் ஜூஸ், யோகார்ட், தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும் விட்டமின் ஈ மாத்திரையை பிரித்து அதில் உள்ள எண்ணெய்யை இதனுடன் கலந்து கொள்ளவும் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

லெமன் ஜூஸ்:
தேவையான பொருட்கள்: பிழிந்த லெமன் ஜூஸ்
செய்முறை: சரும கருப்புகள், பருக்கள் மற்றும் ஏஜ் ஸ்பாட்ஸ் போன்ற பகுதிகளில் இந்த லெமன் ஜூஸை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும் ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற விதத்தில் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.