பிணை முறி மோசடி தொடர்பிலான சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்..

பிணை முறி மோசடி தொடர்பிலான சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்..

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பிலான மோசடி குறித்து குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (சீ.ஐ.டி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த விசாரணைகளுக்காக பிணை முறி குறித்து விசேட அறிவுள்ள அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு எதிர்வரும் காலங்களில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

 

#rishma