புத்தளத்தில் ஐ.தே.கட்சி மற்றும் சுயேட்சை குழு இனது வேட்புப் பட்டியலில் சிக்கல்…

புத்தளம் நகர சபைக்காக சமர்பிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்கள் இரண்டிலும் ஒரே பெண் வேட்பாளரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து தேர்தல் ஆணையகத்திடம் வினவியுள்ளதாக புத்தளம் தேர்வுக் குழு அதிகாரி மற்றும் மாவட்ட செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.

அதன்படி, புத்தளம் நகர சபைக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழு இனாலேயே குறித்த பெண் வேட்பாளரின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வேட்பாளர் பட்டியலிலும் குறித்த பெண் வேட்பாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவை ஒரே விதத்தில் பதியப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பட்டியல் முன்வைத்த சந்தர்ப்பத்தில் அதற்கு ஏதும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தால் அந்நேரமே அதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது மேற்குறித்த நடவடிக்கைக்கு மாற்று வழிகள் ஏதும் உள்ளதா என தேர்தல் ஆணையகத்திடம் கோரியுள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma