எதிர்வரும் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சி அலுவலகங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சிபடுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செலவீனங்களுக்காக 230 மில்லியன் ரூபாய் தேர்தல் ஆணைக்குழுவினால் காவல் துறைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.