வெல்லவாய மருத்துவமனையில் சில ஊழியர்கள் இன்று(25) காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
##