விலங்குகளின் உரிமைக்காக ஐ.நா தலைமையகம் முன்பு நாய்கள் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளன.
பல்வேறு பரிசோதணைகளுக்காக மற்றும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களுக்காகவும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புக்களில் விலங்குகளிலே முதலாவதாக பரிசோதிக்கப்படுகிறது.
இதனால் சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Cruelty Prix International அமைப்பும், பிரபல அழகு சாதன நிறுவனமான The Body Shop நிறுவனமும் இணைந்து விலங்குகள் பரிசோதணைக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நியுயார்க்கில் உள்ள ஜ.நா தலைமையகத்திற்கு முன் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 8 நாய்களை கொண்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் நாய்களின் கழுத்தில் விலங்குகள் பரிசோதணைக்கு எதிரான பதாகைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு வருடத்திற்கு 2 லட்சம் விலங்குகள் பரிசோதணையால் பாதிப்படைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


#g-reeshma