நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பானது பெப்ரவரி முதல் வாரத்தில் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் முன்னெடுக்க உள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறையை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறித்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பள நடைமுறையை நடைமுறைப்படுத்த மேலும் தாமதம் ஏற்படுத்தினால் பெப்ரவரி மாதம், முதல் வாரத்தில் வேலைநிறுத்தத்தினை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி நான்கு மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக உபாலி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
#rishma