தேயிலை மற்றும் மிளகு மீள் ஏற்றுமதி பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிறுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருமானத்தை பெற்றுத்தரும் பிரதான வழிமுறைதான தேயிலை தொழில்துறையாகும். எனவே, பெருந்தோட்டத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையின் தேயிலைதான் சிறந்த தேயிலை என அனைவரும் அறிவார்கள். எனினும், சில வர்த்தகர்கள் வெளிநாட்டிலிருந்து தரம்குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து, அவற்றை கலப்படம் செய்து இலங்கையின் தேயிலையாக அதனை ஏற்றுமதி செய்கின்றனர். இதனால், இலங்கையின் தேயிலை துறைக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேயிலை மீள் ஏற்றுமதியை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.