ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(29) நடைபெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணிக் கட்சி கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்;
“..நடவடிக்கைகளைத் தவிர தெளிவுபடுத்தல்களை ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
நாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை, இதில் பங்குபற்றுவதில் பயனில்லை. பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை நாம் எதிர்பார்க்கவில்லை.
எதிர்வரும் 7ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில் 8ஆம் திகதி மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை.
இவ்வாறு விவாதம் நடத்துவது தேர்தலுக்கு இடையூறாக அமையக் கூடும். எனவே, இந்த நாடாளுமன்ற விவாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்..” என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
#rishma