தேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவிலிருந்து விசேட குழு…

இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவிலிருந்து விசேட நான்கு பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மூன்றாம் திகதி குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின், தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர் எனவும் இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து ரஷ்ய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.