தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று…

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று(30) முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில்இடம்பெறவுள்ளதாக சபாநாகர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் பொருட்டே குறித்த இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், தவிசாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#rishma..