ஊவா மாகாண பாடசாலைகளுக்கு, பாடாசாலை நேரங்களில் அரசியல்வாதிகள் உள்நுழையத் தடை…

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு, பாடாசாலை நேரங்களில் அரசியல்வாதிகள் உள்நுழைவதை தடை செய்து சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண தமிழ் மொழிக்கான கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையின்படி காலை 07.30 முதல் மதியம் 01.30 வரையிலான காலப்பகுதியில் அரசியல்வாதிகள் பாடசாலைக்கு உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பின், பாடசாலை நேரத்திற்கு பின்னர் குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் ஊவா மாகாண தமிழ் மொழிக்கான கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma..