இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு…

2018ம் ஆண்டுக்கான நேற்று(29) நிறைவு பெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை எந்த அணியும் விலைக்கு பெறவில்லை.

ஐ.பி.எல் போட்டிகளில் அதிகப்படியான விக்கெட்டுக்களுக்கு சொந்தக்காரரான லசித் மாலிங்கவை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் விலைக்கு பெறாமை தொடர்பில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அணியும் அண்மையில் நடந்த எந்தவொரு போட்டியிலும் லசித் மாலிங்கவினை உட்சேர்த்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சமூக வலை தளங்களில் அதிகளவு பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லசித் மாலிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஐ.பி.எல் போட்டிகளில் இவ்வளவு தூரம் சேவையாற்றியும் என்னை விலைக்கு பெற எந்த அணியும் முன்வரவில்லை என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை . நான் தான் ஐ.பி.எல் இல் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளேன்.

கடந்த வருடம் அதிக விக்கட்டுக்களை பெற்றேன். இலங்கை அணியின் இருபதுக்கு இருபது அணிக்கு செல்ல முடியாததே எனது ஒரே கவலை.

ஐ.பி.எல் போட்டியில் உலகின் சிறந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஒரு அணியில் 4 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

சிலவேளை , எனது வயதுடன் ஒப்பிட்டு புதிதாக இளம் அணியொன்றை அமைக்க அவர்கள் நினைத்திருக்கக் கூடும்…”

 

#g-reeshma