வட கொரியா மற்றும் 10 இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த தடையை அமெரிக்கா ஓரளவுக்கு நீக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன், அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.