இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இரண்டு அணிகளுக்கிடையே இதுவரை 18 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றுள்ளது.
எனினும் இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தது.
டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 6வது இடத்திலும் பங்களாதேஷ் அணி 9வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.
#rishma