விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி…

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக நீதிமன்ற அமைப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த விசேட நீதிமன்றம் தற்பொழுது செயற்பட்டு வரும் உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

 

#rishma