நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்தில் 6 ஆயிரத்து 203 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், டெங்கு நுளம்புகள் உருவாகுவதை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது