தென்னாபிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் இல்லாததை இந்தியா வாய்ப்பாக பயன்படுத்துமா…

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று(01) டர்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

குறித்த இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2:1 என்ற கணக்கில் வென்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 06 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று(01) ஆரம்பமாகின்றது.

டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் தென்னாபிரிக்கா இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை. டிவில்லியர்ஸ் இல்லாததை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

 

#rishma