பங்களாதேஷ், சிம்பாவ்பே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்றிய முக்கோண தொடரினை அண்மையில் இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.
குறித்த முக்கோணத் தொடரில் இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியினை தோற்கடித்து தொடரினை கைப்பற்றி மீளவும் இலங்கை அணி ரசிகர்கள் மத்தியில் தனது பெயரினை தக்கவைத்தது எனலாம்.
எனினும், குறித்த போட்டியின் இலங்கை அணியின் வெற்றி குறித்து பங்களாதேஷ் அணியின் அதிகாரிகள் மாற்றுக் கருத்தில் உள்ளனர்.
பங்களாதேஷ் அணியானது தோற்கக் காரணம் துடுப்பாட்ட வீரர்களுக்கு பாதகமான முறையில் ஆடுகளம் அமைக்கப் பெற்றிருந்தது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கும் இலங்கையையே குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆதலால், முக்கோணத் தொடரினை இலங்கை வெற்றி கொள்ளவில்லை என தெரிவிக்கின்றனர். ஆடுகளம் சாதகமாக அமைந்திருந்தால் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
இலங்கைக்கு இவ்வாறு குற்றம் சுமத்தக் காரணம் பங்களாதேசின் பிரதான ஆடுகள ஏற்பாட்டாளர் இலங்கையின் காமினி டி சில்வா என்பதாலேயாகும். இறுதிப் போட்டியில் ஆடுகளம் குறித்து ஆயத்த ஏற்பாடுகள் செய்ய ஒப்படைக்கப்பட்டது அவரிடமேயாகும்.
பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவன ஊடகப் பேச்சாளர் இது குறித்து தெரிவிக்கையில், “எமக்குத் தேவையாக இருந்தது அதிகளவு ஓட்டங்கள் பெறக்கூடிய ஆடுகளமே, ஆனால் குறித்த ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு பாதகமாக அமையப் பெற்றுள்ளது. இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
#rishma