பிணை முறி அறிக்கையின் விவாதம் குறித்து சபாநாயகரால் விசேட அறிவிப்பு..

மத்திய வங்கியின், சர்ச்சைக்குரிய பிணை முறி ஆணைக்குழு மற்றும் பாரியல் ஊழல் மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு நடாத்தப்படவுள்ள பாராளுமன்ற விவாதம் தொடர்பில் தேவையான நாட்களை பயன்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை என சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த விவாதத்தை பெப்ரவரி 06ஆம் திகதி நடத்த பெரும்பாலான கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறித்த அந்த காரியாலயம் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் அன்றைய தினம் விவாதத்தை நடத்திய பின்னர் கட்சி தலைவர்களின் விருப்பத்திற்கு அமைய குறித்த விவாதம் தொடர்பில் வேறு நாட்களை பயன்படுத்துவதில் தடை இல்லை என சபாநாயகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

#rishma