எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி சுதந்திர தினமன்று அதிகாலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கொழும்பு நகரத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று(01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறினார்.
அதேவேளை அன்றைய தினம் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#rishma