பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் இணைந்த 24 வங்கி கணக்குகளுக்கான தடை நீடிப்பு…

பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் இணைந்த 24 வங்கி கணக்குகளுக்கான தடை
கொழும்பு மேல் நீதிமன்றினால் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடியுடன், பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனமும் அதன் தலைவர் அர்ஜுன் அலோசியசும் தொடர்பு படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்த தடை விதிக்கப்பட்டது.

இதனை மேலும் 30 தினங்களுக்கு நீடிக்க கொழும்ப மேல் நீதிமன்றம் நேற்று(01) உத்தரவிட்டது.

 

#rishma