70 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது மனைவி முன்னிலையில் நடாந்து கொள்ளும் விதம், அவர்களை வரவேற்பது குறித்து வழிகாட்டல் அறிக்கை ஆவணம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரிமாறப்பட்டு வருகின்றது.
பிரித்தானிய அரசர்களை ஏற்றுக் கொள்ளும் குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில், “அவர்கள் எமது இறுதி அரசர்கள் என்பதால் எச்சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசர்களது முகத்தினை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம் என்றும் அரசர்களை தொடுவது அல்லது உணர்ச்சியாக நோக்குவது என்பது குற்றம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசர்கள் முன்னிலையில் செல்லும் ஆண்கள் அவர்களுக்கு தலை வணங்கி மரியாதை செய்வதோடு, பெண்கள் முழந்தாளிட்டு மரியாதை செய்ய வேண்டும் எனவும் குரிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் முழு விவரம்…

#rishma