நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(03) 75 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும், களுத்துறை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.