ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் தலைமன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்ன் என்று சந்தேகிக்கப்படுகின்ற 423 கிராமும் 900 மில்லிகிராம் அளவுடைய போதைப் பொருளும் 157 பீடீ பக்கட்டுக்களும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.