பாராளுமன்ற கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம் இன்று…

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த கூட்டத்தில் மத்திய வங்கி பிணை முறிப்பத்திரம் மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் சம்பந்தமாக நடக்கவிருக்கும் பாராளுமன்ற விவாதம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி குறித்த விவாதம் நடைபெறவுள்ளதுடன் அதன் பின்னர் அடுத்த தினங்களையும் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma…