பிணை முறி விவாதத்திற்கு மேலதிகமாக இன்னும் 02 நாட்களை எடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானம்…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் பற்றிய அறிக்கைகள் குறித்து நாளை(06) நடைபெறவுள்ள பாராளுமன்ற விவாதத்திற்கு இன்னும் இரு நாட்களை மேலதிகமாக வழங்க இன்று(05) கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 20 மற்றும் 21ம் திகதிகளில் குறித்த விவாதம் நடாத்த மேலதிக நாட்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவல தெரிவித்திருந்தார்.

அதன்படி நாளை(06) குறித்த விவாதம் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவர குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

#rishma…