இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரியை வெளியில் தேட வேண்டியதில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரிகள் இருக்கின்றனர். எனவே, அவர் அவதானமாக இருக்க வேண்டும். தவறான இடத்தில் எதிரி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் கூறிவரும் உதாரணங்களில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது”
#g-rishma