கோரிக்கைகள் சிலவற்றினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வங்கியின் ஊழியர்கள் இன்று(07) முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தலைவரால் நியமிக்கப்பட்ட உபகுழுவினால் குறித்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்களை வழங்கப்படும் என நேற்று(06) இரவு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சிக்கல்கள் மற்றும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் இயக்குனர் குழு ஒன்றினை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் நிறுவி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என குறித்த உபகுழுவினால் உத்தியோகபூர்வ உறுதி மொழியொன்றினையும் வழங்கியதாக குறித்த சங்கம் குறிப்பிட்டிருந்தது.
தொழிற்சங்கங்களின் அடக்குமுறை, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை தண்டித்தல், பழிவாங்கல், சேவை நாட்களை நீக்கல், ஊழியர்களுக்காக அவர்களின் குறைபாடுகளை முன்வைக்கும் ஊழியர்களின் ஒன்றிணைந்த குழுவினை நீக்கல் மற்றும் மேல்முறையீட்டு வாரியத்தினை நீக்கல், வாரிய மாற்றம் ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma