இலண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிற்கு பாதுகாப்பு ஆலோசகர் பணி ஜனாதிபதி பணிப்பின் பேரில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வௌிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
#rishma