கோரிக்கைகள் சிலவற்றினை முன்னிறுத்தி இலங்கை பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பௌத்த சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கம் ஆகியவை சேர்ந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது கொழும்பு நகர மண்டப அருகாமையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்று(07) பகல் (01:30) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக குறித்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நகர மண்டபத்தினை நோக்கி பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#rish