120 பேரூந்து வீதியூடாக இன்று விசேட போக்குவரத்து திட்டம்..

பெல்லன்வில ரஜமகா விகாரையின் மறைந்த விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று(08) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதியில் விஷேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனபடி, ‘… இன்று(08) பகல் 12.30 மணியளவில் மஹரகம – தெஹிவளை வீதியின் பெல்லந்தரை சந்தியில் இருந்து பொரலஸ்கமுவ நோக்கிய வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

தேகம் அடங்கிய வாகனப் பேரணி பொரலஸ்கமுவ சந்தியில் இருந்து 120 பேரூந்து வீதியூடாக ரத்னபிட்டிய சந்தி நோக்கி செல்லும் போது, 120 வீதியின் கொழும்பில் இருந்து வௌியேறும் திசை இரு வழிப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படும்..’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 120 பஸ் வீதியின் பொரலஸ்கமுவ சந்தி மற்றும் பெபிலியான சந்தியில் இருந்து வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

ஆகவே குறித்த நேரங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

#rishma