வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகள் தேர்தல் மையங்களுக்கு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப்பெட்டி விநியோகப் பணிகள் இன்று(09) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

340 உள்ளுராட்சி மன்றங்களின் 8,325 உறுப்புரிமைக்காக, 57 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.

இதில் வாக்களிக்க ஒரு கோடியே 57 லட்சத்து 60860 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், ஒரு லட்சத்து 75 ஆயிரம் அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.