வாக்குகளை எண்ணுவது மற்றும் ஆசன பகிர்வீடு பற்றி தேர்தல் ஆணையகம் விளக்கம்…

340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நாளை(10) நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விகிதாசார மற்றும் தொகுதி கலப்பு முறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்காக அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விவரிக்கையில்;

பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரே இடத்தில் வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும்.

நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும்.

 

#rishma