தேசிய முறைப்பாட்டு விசாரணை பிரிவு ஸ்தாபிப்பு…

உள்ளுராட்சித் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்காக தேசிய முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைபாடுகள் இன்று காலை 6 மணி முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில்,முறைபாடுகளை பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 0112 86 64 92 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 0112 86 64 70 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், மத்திய மாகாணத்தில் 0112 86 64 78 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும்,
மேல் மாகாணத்தில் 0112 86 64 48 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

இதனை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைபாட்டு பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவிற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

112 86 65 41 மற்றும் 0112 86 65 46 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி, தமது முறைபாடுகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது