நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பின் 75% ஆன தேர்தல் வட்டாரங்களின் இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று(10) மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இன்றைய வாக்களிப்பின் போது எதுவித பாரிய அசம்பாவிதங்களும் பதிவாகியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு பின்னரான காலத்தையும் அமைதியானதாக பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் நாளை நண்பகல் 12.00 மணியளவில் அனைத்து தேர்தல் முடிவுகளையும் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
#rishma…