சட்ட விரோதமான துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது…

தங்கொடுவ -யோஹியான – மொடுமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து, சட்ட விரோதமான சில துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் வலான குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மற்றும் ஓர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமான முறையில் மதுபானம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத மதுபானத்திற்கு மேலதிகமாக இரகசியமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.