இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சபரகமுவ மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் மணித்தியாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.