ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்புடனான ஒரு தேசிய கூட்டணியில் அரசாங்கத்தினை நிறுவி பாராளுமன்றில் மற்றும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஹெல உறுமயவின் பிரதம செயலாளர், அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
உர மானியங்கள், சமுர்த்தி நிவாரணம் மற்றும் அதற்கு அப்பால், மக்களின் வலிக்கு பதிலளிக்கும் பாரிய அரசியல் சீர்திருத்தம் எதிர்வரும் 18 மாதங்களில் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் குறித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேற்குறித்த மக்கள் தேவையினை பூர்த்தி செய்ய இரு தலைவர்களும் தொலைநோக்காக இருக்க வேண்டும் எனவும், அதனை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் அமைதியான சூழ்நிலையினை கடைபிடிக்க வேண்டும் எனவும், எச்சந்தர்ப்பத்திலும் ஹெல உறுமய மக்களின் எதிர்பார்ப்புகளில் உடைக்க அனுமதிக்காது எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#rishma..