சைட்டம் குறித்து மருத்துவ சங்கத்தினால் ஜனாதிபதிக்கு மீண்டும் குறிப்பாணை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ நிறுவன பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிர்வரும் 20ம் திகதி சிறப்பு குறிப்பாணையொன்றை கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினர்களுடன் கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளின் படி குறித்த குறிப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் ஊடக குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் தீர்வு மற்றும் மேலும் சில விடயங்கள் இந்த குறிப்பாணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#rishma