பல கோரிக்கைகளை முனவைத்து, உமா ஒயா திட்டத்தின் வெல்லவாய பகுதியின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், வாகன சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து இன்று(17) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குதல், மற்றும் சம்பளத்தை அதிகரித்தல் முதலான கோரிக்கைகளை முன்வைத்துபணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக உமாஒயா திட்டத்தின் தாழ்வுப் பிரதேசங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும்வரை தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.