சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை…

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த இம்ரான் அலி(24) என்பவருக்கு லாகூர் நீதிமன்றம் நேற்று(17) மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஷைனப் அன்சாரி எனும் சிறுமியின் சடலம் குப்பையிலிருந்து மீட்கப்பட்டது

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமிக்கு நடத்திய உடற்கூறு ஆய்வில் அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார் என்றும், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதற்காக அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிறுமி கொலை தொடர்பாக பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை வழக்கில், இம்ரான் அலி(24), என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, பயங்கரவாத வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இம்ரான் அலிக்கு லாகூர் நீதிமன்றம் நேற்று(17) மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.