தலங்கம, விமலதிஸ்ஸ மாவத்தையில் இன்று(18) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆண் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தலங்கம பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.