காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…

நாட்டின் பல பிரதேசங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று(18) பிற்பகல் வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை பொழுது மிதமான காலநிலை நிலவ கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.