இன்றும் UPFA யுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று(19) நண்பகல் 12.00 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இன்றைய சந்திப்பு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.