சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சேர்த்துள்ளமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 16 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று(19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.