மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியின பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனிடம் பிடியாணை ஒப்படைக்க முடியாதென பரிஸ் இன்டர்போல் நிராகரித்துள்ளது.
பிடியாணைகளை ஒப்படைப்பது பிரான்ஸ் நாட்டு இன்டர்போல் சட்டத்திற்கு உட்பட்டவை அல்லவென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அர்ஜுன் மகேந்திரன் இலங்கை பொலிஸாருக்கு தேவைப்படும் நபர் என அந்நாட்டு பொலிஸார் இன்னமும் பரிஸ் இன்டர்போல் பொலிஸாரிடம் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்த பின்னரே தாம் சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக பரிஸ் இன்டர்போல் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#rishma