பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டுக்கு அழைக்கப்படுகிறார்…!!!

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கை அரசு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய இன்று(21) நாடு திரும்பவுள்ளதாக நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பெப்ரவரி 04ம் திகதி பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது.

அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை மீளப் பெற்றுக் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma