ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையின்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சுக்கள் திணைக்களங்களினால் வழங்கப்படும் தொழில் அடையாள அட்டைகள், புகைப்படம் ஒட்டப்பட்ட அல்லது ஒட்டப்படாத ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடன் கூடிய தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், தேசிய அடையாள அட்டை, காலாவதியான கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
(riz)