அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், பின்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலினை நடாத்த வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியாக எதிர்ப்புப் பேரணிகளை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணி எதிர்வரும் மார்ச் 06ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நுகேகொட பகுதியில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் உள்ளிட்டோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
நுகேகொடையில் ஆரம்பமாகும் குறித்த எதிர்ப்புப் பேரணியினை மாவட்ட மட்டத்திலும் முன்னெடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பு தரப்பினரையும் தொடர்புபடுத்துவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்திருந்தார்.
#rishma